ஆப்கான் : யு.எஸ். படையினர் எண்ணிக்கை 1 லட்சத்தை தொடுகிறது

செவ்வாய், 1 டிசம்பர் 2009 (15:38 IST)
ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 34,000 அமெரிக்க படையினரை அனுப்பும் முடிவை அதிபர் பராக் ஒபாமா அறிவிக்க உள்ள நிலையில், ஆப்கானுக்கான அமெரிக்க படையின் எண்ணிக்கை ஒரு லட்சமாக அதிகரிக்க உள்ளது.

ஆப்கான் மற்றும் பாகிஸ்தானுக்கான அமெரிக்காவின் புதிய இராணுவ தந்திர திட்டத்தை ஒபாமா அறிவிக்க இன்னும் 24 மணி நேரத்திற்கும் குறைவான கால அளவே உள்ளது.

அவரது இந்த புதிய திட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 34 ஆயிரம் அமெரிக்க படையினரை அனுப்புவது குறித்த அறிவிப்பும் இடம் பெற உள்ளது.

அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டு, அதனைத் தொடர்ந்து 34 அமெரிக்க படையினர் 34,000 பேர் ஆப்கானுக்கு சென்றால் அங்குள்ள மொத்த அமெரிக்க துருப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தொட்டுவிடும் என்று 'நியூயார்க் டைம்ஸ் ' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்