அண்டார்டிக் பனிக்கு இடையே சிக்கி தவிக்கும் சொகுசு கப்பல்

வெள்ளி, 27 டிசம்பர் 2013 (18:16 IST)
அண்டார்டிக் கடலில் மோசமான வானிலையால் பனிக்கட்டிகளுக்கு இடையே ரஷிய சொகுசு கப்பலொன்று சிக்கி தவிக்கிறது.
FILE

அகடெமிக் ஷோகல்ஸ்கி என்னும் அந்த சொகுசு கப்பலில் 30 பயணிகள், 22 விஞ்ஞானிகள் மற்றும் 22 கப்பல் ஊழியர்கள் உட்பட 74 பேர் நடுக்கடலில் உதவிக்காக காத்திருக்கின்றனர்.
FILE

பனிக்கட்டிகளுக்கு நடுவே சிக்கிய கப்பல், நகர முடியாத சூழல் ஏற்பட்டதால் உடனடியாக இருக்கும் கப்பலுக்கு உதவி கேட்டு அகடெமிக் ஷோகல்ஸ்கி கப்பலின் கேப்டன் கிறிஸ்மஸ் தினத்தன்று காலை செய்தி அனுப்பினார்.

இந்த கப்பலுக்கு மிக அருகாமையில் இருந்த ஸ்க்யு லாங் என்னும் சீன கப்பல் 900 கி.மீ தொலைவில் இருந்தது.
FILE

இக்கப்பல் தற்போது அகடெமிக் ஷோகல்ஸ்கி கப்பலை நோக்கி 450 கி.மீ வந்துவிட்டதாகவும், வானிலை ஒத்துழைத்தால் இன்று நள்ளிரவு அகடெமிக் ஷோகல்ஸ்கி கப்பலை அடைந்துவிடுவெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகடெமிக் ஷோகல்ஸ்கி கப்பலில் உள்ள பயணிகளுக்கு இதனால் எந்த ஆபத்தும் இல்லையென தெரிகிறது.
FILE

சீன கப்பல், ரஷிய கப்பலை சுற்றியிருக்கும் பனிக்கட்டிகளை அகற்றியதும், அகடெமிக் ஷோகல்ஸ்கி கப்பல் வழக்கம்போல அதன் பயணத்தை துவங்கிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்