ஃபேஸ்புக்கில் 13 லட்சம் நண்பர்களை வென்ற சிறுவன்!

ஞாயிறு, 16 பிப்ரவரி 2014 (11:00 IST)
FILE
இன்று உலகம் முழுதும் ஃபேஸ்புக்தான் நண்பர்கள் உறவினர்கள் சந்திக்கும் இடமாக உள்ளது.

ஃபேஸ்புக் அக்கவுண்ட் இல்லாதவனை ஏதோ தலையே இல்லாதவனாக பார்க்கும் போக்கு அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவை சேர்ந்த நண்பர்களே இல்லாத 10 வயது சிறுவனுக்கு பேஸ்புக்கில் 13 லட்சம் நண்பர்கள் கிடைத்துள்ள செய்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.அமெரிக்காவின் மெக்சிகன் மாகாணத்தை சேர்ந்த அந்த சிறுவன், மனஇறுக்க நோயால் பாதிக்கப்பட்டவன். இதனால், அவனுக்கு நண்பர்களே கிடையாது.

தனது மகனின் 10-வது பிறந்தநாளில் அவனுக்கு நண்பர்களை பரிசாக அளிக்க அவனது தாயார் ஜெனிபர் ஹன்னிகம் முடிவு செய்தார். குறுகிய காலத்தில் அதிக நண்பர்களை பெற சிறந்த வழி பேஸ்புக் தான் என்பதை அறிந்த அவர், தனது மகனுக்காக பேஸ்புக்கில் தனி பக்கத்தை உருவாக்கி, அதில் அவனது நோய் குறித்தும், அவனுக்கு நண்பர்களே இல்லை என்ற தகவலையும் குறிப்பிட்டிருந்தார்.என்ன ஆச்சரியம் பாருங்கள். ஒரு சில நிமிடங்களிலேயே அவனுக்கு 13 லட்சம் நண்பர்கள் கிடைத்தனர். இதனால் அந்த சிறுவன் மகிழ்ச்சியில் திளைக்கிறான்.

வெப்துனியாவைப் படிக்கவும்