டிஸ்னி தயாரிப்பில் உருவாகும் த ஜங்கிள் புக்

திங்கள், 21 ஜூலை 2014 (10:55 IST)
இந்திய குழந்தைகளின் விருப்பத்துக்குரிய த ஜங்கிங் புக் கார்ட்டூன் தொடரை ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி திரைப்படமாக எடுக்கிறது.



 

 
டிஸ்னி என்றால் கார்ட்டூன், கார்ட்டூன் என்றால் டிஸ்னி. அவர்கள் த ஜங்கிள் புக்கின்பால் ஈர்க்கப்பட்டதில் எந்த வியப்புமில்லை. இந்திய குழந்தைகளின் விருப்பத்துக்குரிய மௌக்ளி, ஷேர்கான், பகீரா எல்லாம் டிஸ்னியின் உயர் தொழில்நுட்பத்தில் அடுத்த வருடம் திரைக்கு வருகிறார்கள்.
 
மௌக்ளியாக நடிக்க நியூயார்க்கைச் சேர்ந்த இந்திய - அமெரிக்க சிறுவன் நீல் சேத்தியை தேர்வு செய்துள்ளனர். நீல் சேத்தியின் திறமை மற்றும் தோற்றம் அனைவரையும் கவரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் படத்தை இயக்கும் Jon Favreau.  படத்தின் ஸ்கிரிப்டை எழுதியிருப்பவர் ஜஸ்டின் மார்க்.
 
இதுபோன்ற அனிமேஷன் படங்களில் கதாபாத்திரங்களுக்கு குரல்தர பிரபல ஹாலிவுட் நடிகர்களைதான் பயன்படுத்துவார்கள். இதிலும் பென் கிங்ஸ்லி, ஸ்கேர்லெட் ஜான்சன் போன்றவர்கள் குரல்தர இருக்கிறார்கள். லைவ் ஆக்ஷன் மற்றும் அனிமேஷன் காம்பினேஷனில் இந்தப் படம் தயாராகிறது. 
 
படம் 2015 அக்டோபர் 9 திரைக்கு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்