உலக சினிமா - தி கோஸ்ட்

செவ்வாய், 29 நவம்பர் 2016 (14:30 IST)
தென்கொரியாவின் இளம் இயக்குனர்களில் முக்கியமானவர் பாங் ஜுன் கொ. மெமரிஸ் ஆஃப் மர்டர், மதர், ஸ்னோ பியர்சர் போன்ற முக்கியமான படங்களை இயக்கியவர். பெரும் பொருட் செலவில் 2006 -இல் இவர் இயக்கிய திரைப்படம், தி கோஸ்ட். 


 
 
வினோதமான ஒரு ராட்சஸ விலங்கு சியோலில் ஓடும் நதியிலிருந்து திடீரென்று வெளியேறி மக்களை தாக்க ஆரம்பிக்கிறது. மனிதர்களை உணவாகக் கொள்ளும் அந்த விலங்கை அழிப்பதுதான் தி கோஸ்ட் படத்தின் கதை.
 
இதேபோன்ற கதையுடன் காட்ஸிலா தொடங்கி கிங்காங்வரை ஏராளமான படங்களை நாம் பார்த்திருக்கிறேnம். அந்தப் படங்களிலிருந்து தி கோஸ்ட் படத்தை வித்தியாசப்படுத்தி காட்டுகிற பல அம்சங்கள் உள்ளன. அவைதான் இந்தப் படத்தை அதிகம் பேர் பேசுவதற்கு காரணமாக உள்ளது. 
 
தி கோஸ்ட் படத்தில் வருகிற விலங்கு பெரிதாக இருந்தாலும், காட்ஸிலா மாதிரி ராட்சஸ உருவம் கொண்டதில்லை. சாதாரண மனிதன் தாக்கினால் வலிக்கிற அளவுக்கு சின்ன விலங்குதான்.
 
பொதுவாக இதுபோன்ற மிருகத்தை பாராக்கிரமம்மிக்க நாயகனோ, சூப்பர்ஹீரோவோதான் தாக்கி அழிப்பார்கள். ஆனால், இதில் ஒரு சாதாரண கொரிய குடும்பம்தான் இந்த மிருகத்தை தாக்கி அழிக்கிறது.
 
இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பம்சம், அமெரிக்காவை இயக்குனர் விமர்சித்திருக்கிறவிதம். அமெரிக்க டாக்டர் ஒருவர் நச்சு ரசாயானத்தை நதியில் கலப்பதால்தான் அந்த ராட்சஸ விலங்கு உருவாகும். அந்த விலங்கால் காயப்படுத்தப்பட்டவர்களிடம் எந்த வைரஸும் இருக்காது. எனினும் வைரஸ் இருப்பதாக அந்த அமெரிக்க டாக்டர் வதந்தி கிளப்பி, காயம்பட்டவர்கள் மீது பரிசோதனை நடத்துவார். அமெரிக்க அரசாங்கம் ஒருபடி மேலே சென்று, வைரஸnல் பாதிக்கப்பட்ட தென்கொரியாவை மீட்கிறேன் பேர்வழி என்று, ஏஜென்ட் யெல்லோ என்கிற ரசாயனத்தை பயன்படுத்தும்.
 
நகைச்சுவை, த்ரில் சரிவிகதத்தில் கலந்த தி கோஸ்ட் திரைப்படம் தென்கொரிய சினிமா சரித்திரத்தில் அதிகம் வசூலித்த படங்களில் ஒன்றாக திகழ்கிறது. 
 
அனைவரையும் திருப்தி செய்யும் படமாக தி கோஸ்ட் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்