மீண்டும் குமாரசாமி தான் முதல்வரா? கர்நாடகாவில் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு..!

வியாழன், 11 மே 2023 (08:11 IST)
கர்நாடக மாநிலத்தில் நேற்று சட்டமன்ற தேர்தல் முடிவு அடைந்த நிலையில் தேர்தலுக்குப் பின்னர் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ஒரு சில கருத்துக்கணிப்பு பாஜகவுக்கு ஆதரவாகவும் ஒரு சில கருத்துக்கணிப்பு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும் வந்துள்ளது. 
 
ஆனால் சில கருத்துக்கணிப்பு கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமையும் என்றும் குமாரசாமி கட்சியின் ஆதரவு யாருக்கோ அந்த கட்சி தான் ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
குமாரசாமியை பொருத்தவரை ஒரே ஒரு தொகுதியை ஆதரவு கொடுப்பதாக இருந்தாலும் அவர் முதலமைச்சர் பதவியை கேட்பார் என்பதால் மீண்டும் முதலமைச்சர் பதவி குமாரசாமிக்கு கொடுக்க காங்கிரஸ் கட்சி தயங்காது என்று கூறப்படுகிறது. 
ஆனால் அதே நேரத்தில் பாஜக குமாரசாமியிடம் ஆதரவு கேட்காது என்றும் பாஜகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க குமாரசாமியை முதல்வராக காங்கிரஸ் திட்டமிடும் என்றும் கூறப்படுகிறது. 
 
கர்நாடகாவில் தொங்கு சட்டசபை நிகழ்ந்தால் பல அரசியல் சித்து விளையாட்டுகள் நடக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்