வேலை‌க்கு‌ப் போகு‌ம் பெ‌ண்க‌ளி‌ன் ‌விரு‌ப்ப‌ம்

புதன், 21 மே 2008 (12:29 IST)
வீ‌ட்டி‌லஇரு‌க்கு‌மப‌ெ‌‌ண்களை ‌வித‌ற்போதவேலை‌க்கு‌சசெ‌ல்லு‌மபெ‌ண்க‌ளி‌னஎ‌ண்‌ணி‌க்கஅ‌திக‌ரி‌த்து‌வி‌ட்டது.

வீட்டையும் நிர்வகித்துக் கொண்டு, வேலைக்கும் சென்று வருவது சற்று கடினமான பணி தான் என்றாலும் அதனை பெண்ணைத் தவிர வேறு யாரால் ‌சிற‌‌ப்பாசெய்து விட முடியும்.

பல வீடுகளில் பெண்களுக்கு துணையாக அவர்களது கணவர்கள் இருந்தாலும், எல்லா பெண்களுக்கும் இந்த நல்வாய்ப்பு கிட்டுவதில்லை.

எனினும் வேலைக்குச் செல்லும் எல்லா பெண்களுக்கும் சில பல விருப்பங்கள் இருக்கின்றன.

அவற்றை பட்டியலிட்டால் ஒரு அரசியல்வாதியின் தேர்தல் அறிக்கை போன்று நகைச்சுவையாகவும் இருக்கும்.

சரி அது என்னவென்று பார்ப்போம்.

ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்கள் வசதிக்கேற்ற அலுவலக நேரம், தன்னுடன் பணியாற்றும் ஆணுக்கு நிகரான ஊதியம், அரட்டல் மிரட்டல் இல்லாத அன்பான பணியிடம், புரிந்து கொண்டு வாய்ப்பு வழங்கும் முதலாளி, வார‌த்‌தி‌ல் ‌நி‌ச்சய‌மஇர‌ண்டநா‌ள் ‌விடுமுறை, அ‌வ்வ‌ப்போதஓ‌ய்வெடு‌க்த‌னி அறை, குழ‌ந்தைகளை‌பபராம‌ரி‌க்அலுவலக‌த்‌தி‌லேயஓ‌ரிட‌ம், ப‌ண்டிகநா‌ட்களு‌க்கமு‌னகூடுத‌ல் ‌விடுமுறை, நெ‌ரிச‌ல் இ‌ல்லாம‌ல் வரு‌ம் பேரு‌ந்து அ‌ல்லது ர‌யி‌ல் முடி‌‌கிறது‌ ‌விரு‌ப்ப‌ங்க‌ள்.

அலுவலக‌த்‌தி‌லஇரு‌ந்து ‌வீ‌ட்டி‌ற்கு‌சசெ‌ன்றா‌ல், வீட்டில் தொல்லை தராத குழந்தைகள், வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்ளும் கணவன், த‌ண்‌ணீ‌ரகுழா‌யி‌லகா‌ற்று‌க்கப‌தி‌லஎ‌ப்போது‌மத‌ண்‌ணீ‌ரவருவது, அலுவலகத்திற்குப் போய் வர தனியாக ஒரு வாகனம், இர‌வி‌லகடிகாரத்தைப் பார்த்து முறைக்காத மாமியார் என இந்த பட்டியல் நீள்கிறது.

இந்த விருப்பங்கள் அனைத்தும் பெண்கள் தினம் தினம் சந்திக்கும் பிரச்சினைகளை எளிதாக்கி விடும் என்பது உண்மைதான்.

இதெல்லாம் சாத்தியமில்லைதான் என்றாலும் ஒன்றிரண்டாவது நிறைவேறும் என்ற நம்பிக்கையில்தான் பெண்களும் சுற்றிக் கொண்டிருக்கின்றனர் கடிகார முட்களாய்.

வெப்துனியாவைப் படிக்கவும்