செய்முறை:
முதலில் காளானை நன்கு கழுவி சிறு துண்டுகளாக்கவும். இஞ்சி மற்றும் பூண்டு இவற்றுடன் சிறிதளவு தயிர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். சீரகம், மிளகு இரண்டையும் தண்ணீர் சேர்க்காமல் பொடித்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கார்ன்ப்ளார் மாவு, தனியாப்பொடி, கரம்மசாலா பொடி, மிளகாய் தூள், மஞ்சள்பொடி, மிளகு மற்றும் சீரகப் பொடி, தேவையான உப்பு ஆகியவற்றை போட்டு கலந்து கொள்ளவும். பொடி வகைகளுடன் இஞ்சி பூண்டு விழுது, தயிர் ஆகியவற்றை சேர்க்கவும்.