இந்த டெக்னாலஜி உலகம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பழைமையை தலைமுறை உணவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. அந்த வகையில் பாரம்பரியம் உணவுகளின் அரசனாக திகழும் கேழ்வரகு பசி உணர்வை குறைத்து, உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும். மேலும், இதில் கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும்.
இதை முதல் நாள் இரவு செய்து வைக்கவும். கொண்டை கடலையை முதல் நாள் இரவு ஊற வைத்து மறுநாள் வேக வைத்து வடிகட்டி அத்துடன் மிளகாய், வெல்லம், உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்தில் அரைக்கவும்.
இட்லி தட்டில் எண்ணெய் தடவி முதலில் கேழ்வரகு, உளுந்து மாவு கலவையை அரைக்கரண்டி விட்டு அதன் மேல் ஒரு கல் கரண்டி கடலை விழுதைப் போடவும். மீண்டும் கால் கரண்டி கேழ்வரகு மாவு, உளுந்து கலவையை விட்டு இட்லியை வேக வைத்து எடுக்கவும். இப்போது மனமனக்கும் சுவையில் ஆரோக்கியமான கேழ்வரகு ஸ்டப் இட்லி ரெடி.