எளிதான முறையில் ஆடி கூழ் செய்ய !!

தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று கூழ். கேழ்வரகு, கம்பு போன்றவற்றின் கூழ்தான் முந்தைய நாட்களில் பிரதான உணவாகவே இருந்தன.  நாளடைவில் கேழ்வரகு, கம்பு பயன்பாடு குறைந்து அரிசி உணவுக்கு மாறிவிட்டனர்.

தேவையான பொருட்கள்: 
 
கேழ்வரகு மாவு - 1 கோப்பை 
பச்சரிசி - கால் கோப்பை (நொய் அரிசி)
தண்ணீர் - 2 கோப்பை 
தயிர் - 1 கோப்பை 
சின்ன வெங்காயம் - 6 
பச்சை மிளகாய் - 1 (பொடியாக)
உப்பு தேவையான அளவு

 
செய்முறை:
 
முதலில் அரிசி நொய் அல்லது சிறுதானிய அரிசியை முதலில் வேக வைத்துக் கொள்ளவேண்டும். வேகவைத்த அரிசியில் முதல்நாளே கரைத்து நன்கு புளிக்க வைத்த கேழ்வரகு மாவை நீர்க்கக் கரைத்து அதை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
 
அடிப்பிடிக்க விடாது கிண்டும் போது கூழ் கொஞ்சம் கொஞ்சமாக கெட்டியாகி விடும். இப்படி முதல்நாள் இரவே கிண்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

மறுநாள்  காலையில் இந்த கூழில் சிறுது தண்ணீர், உப்பு, தயிர் போட்டு நன்கு கரைத்து, பொடி நறுக்கிய வெங்காயம் அல்லது சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், மாங்காய்  சேர்த்து குடிக்கலாம்.
 
இந்த கூழை கரைக்காமல், காய்கறி பயிர் வகைகள் போட்ட குழம்பு, மீன்குழம்பு, கறி குழம்பு, கருவாட்டு குழம்பு போன்றவற்றை கலந்தும் சாப்பிடலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்