சுவையான வேர்க்கடலை குழம்பு செய்ய !!

திங்கள், 28 பிப்ரவரி 2022 (18:45 IST)
தேவையான பொருட்கள்:

வேர்க்கடலை - அரை கப் (ஊற வைத்து வேக வைக்கவும்)
தேங்காய் துண்டுகள் - 2 (அரைக்கவும்)
கடுகு, உளுத்தம் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்
புளிக் கரைசல் - அரை கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை:

ஒரு பாத்திரத்தில் புளிக் கரைசலை விட்டு அரைத்த தேங்காய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டு, தேவையான தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.

வேகவைத்த வேர்க்கடலையைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் தீயைக் குறைத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகத்தூள், கறிவேப்பிலை போட்டு, பொரிந்ததும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பொன்னிறமாக வந்ததும் கொதிக்கும் குழம்பில் கொட்டி இறக்கவும். சுவையான வேர்க்கடலை குழம்பு தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்