செய்முறை:
மேல் மாவு செய்ய கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டுக் கெட்டியாகப் பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடலைப்பருப்பை நன்றாக கழுவி 1 மணிநேரம் ஊறவைத்த பின்னர் வேக வைத்து கொள்ளவும்.
வேகவைத்த கடலைப்பருப்புடன் பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். பிறகு, சிறிய உருண்டைகளாக உருட்டவும். இதுதான் பூரணம்.
பிசைந்த மாவைச் சிறிய உருண்டைகளாக்கி, சப்பாத்திகளாகத் திரட்டி நடுவே பூரணம் வைத்து மூடி மீண்டும் சப்பாத்திகளாகத் திரட்டவும். தோசைக்கல்லைச் சூடாக்கி, சப்பாத்திகளைப் போட்டுச் சுற்றிலும் நெய் அல்லது வெண்ணெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். சூப்பரான பருப்பு ஸ்டஃப்டு பரோட்டா தயார்.