பின்னர் கடாய் ஒன்றில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், பெருங்காய தூள் சேர்த்து, நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் பூண்டை தட்டி சேர்த்து கொள்ளவும். பிறகு துருவிய கேரட், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். கேரட் வேக சிறிதளவு தண்ணீர் ஊற்றவும். தேங்காய் துருவல் மற்றும் சீரகத்தை தண்ணீர் ஊற்றாமல் அரைத்து சேர்க்கவும்.