செய்முறை:
முதலில் ஒரு மீடியம் சைஸில் இருக்கும் காலிஃபிளவரை எடுத்து பெரிய பெரிய பூக்களாக வெட்டி சுத்தம் செய்து, அதை துருவிக் கொள்ள வேண்டும். கேரட் பீட்ரூட் துருவலில் ஒவ்வொரு பூக்களாக எடுத்து துருவிக் கொள்ளுங்கள். துருவிய 2 கப் அளவு காலிஃப்ளவரை தனியாக ஒரு பௌலில் போட்டுக் கொள்ளுங்கள்.
பொடியாக நறுக்கிய கருவேப்பிலை தழை, இந்த பொருட்களை சேர்த்து முதலில் உங்கள் கையை கொண்டு அழுத்தம் கொடுத்து நன்றாக பிசைய வேண்டும். தண்ணீர் எதுவும் ஊற்றி விடக்கூடாது. பிசையும்போது இதிலிருந்து தண்ணீர் விடத் தொடங்கும். அந்த தண்ணீரே போதுமானது.
மேலே குறிப்பிட்டுள்ள மசாலா பொருட்களை போட்டு ஒரு முறை பிசைந்து இறுதியாக தான் கடலை மாவு 1 கப், அரிசி மாவு 1/2 கப், சேர்த்து மீண்டும் ஒருமுறை உங்கள் கைகளை வைத்து அழுத்தம் கொடுத்து பிசைய வேண்டும். இது நமக்கு கெட்டியான மாவு பதத்திற்கு கிடைத்துவிடும்.
இந்த மாவை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி, உள்ளங்கையில் வைத்து சீராக தட்டி வடை போல அப்படியே எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டியதுதான். அடுப்பில் கடாயை வைத்து அதில் இந்த வடையை போட்டு பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும்.