பாகற்காய் பொரியல் செய்வது எப்படி...?

புதன், 11 மே 2022 (15:46 IST)
தேவையான பொருள்கள்:

பாகற்காய் - 250 கிராம்
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் -1
பூண்டு - 4 பல்
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
சாம்பார் மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
சாம்பார் பொடி -1 டேபிள் ஸ்பூன்
வெல்லம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு



செய்முறை :

பாகற்காயின் மேலுள்ள தோலை நீக்கி உப்பு தண்ணீரில் போட்டு ஊறவைக்க வேண்டும். பிறகு, பாகற்காயை நன்கு தண்ணீரில் கழுவ வேண்டும்.

கடாயில் சிறிதளவு எண்ணைய் ஊற்றி வெங்காயம் போட்டு வதக்க வேண்டும்,பிறகு இடித்த பூண்டை போட்டு வதக்க வேண்டும், பிறகு பாகற்காய் போட்டு 5 நிமிடங்கள் மூடி போட்டு வேகவைக்க வேண்டும். அதன் பிறகு உப்பு, மஞ்சள் தூள்,காஷ்மீரி மிளகாய் தூள், சாம்பார் மிளகாய் தூள், சாம்பார் பொடி தேவையான மசாலாக்களை போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும்.

கடைசியாக வெல்லம் போட்டு, தண்ணீர் ஊற்றாமல் நன்றாக வறுக்க வேண்டும். 3 நிமிடங்கள் கழிந்து கொத்தமல்லி போட்டு இறக்கவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்