பச்சைப்பயறு குருமா செய்வது எப்படி...?

தேவையான பொருட்கள்:
 
பச்சை பயிறு - 1/2 கப்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
மிளகாய் - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை - தேவையான அளவு (பொடியாக நறுக்கியது)

செய்முறை:
 
முதலில் ஒரு குக்கர் அல்லது பாத்திரம் எடுத்து அதில் பச்சை பயிறு, வெங்காயம், தக்காளி, மிளகாய் போட்டு வேக வைக்கவும். பின்னர், மற்றொரு அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இவற்றுடன் முன்னர் வேகவைத்த பயறு மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து கிளறவும்.
 
இந்த கலவை ஓரளவு சுண்டிய பிறகு கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை தூவி கீழே இறக்கவும். இப்போது சுவையான மற்றும் ருசியான சப்பாத்தி குருமா தயாராக இருக்கும்
 
நன்மைகள்:
 
கர்ப்பிணி பெண்கள் தினமும் முளைகட்டிய சிறுபயிறு சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு அளவாக கொடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் அதிகமாக சாப்பிட்டால் வயிறு உப்பும். சமயத்தில் பேதி கூட ஆகலாம்.
 
இரவு நேரத்தில் பச்சை பயிறு தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனென்றால் இவை வாயுவை உற்பத்தி செய்யும். ஜீரண சக்தி குறைபாடு, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை, சீறுநீரகப் பாதிப்பு கொண்டவர்கள் மிக குறைவான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்