கறிவேப்பிலை குழம்பு செய்வது எப்படி...?

Webdunia
தேவையான பொருட்கள்:
 
உருவிய கறிவேப்பிலை - 2 கப்
சின்ன வெங்காயம்  - 1/4 கிலோ
பூண்டு - 1
சோம்பு - 2 டீஸ்பூன்
சாம்பார் பொடி - 4 டீஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க - கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
 
கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, புளி எல்லாவற்றையும் தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து கொள்ளவும். பின்பு எண்ணெய் காயவைத்து அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து, நறுக்கிய பூண்டு, வெங்காயம் வதக்கி, சிவக்க வெந்தபின் அரைத்த  கலவையைப் போட்டு 5 நிமிடம் வதக்கி, சட்னி பதத்தில் கொதித்தபின் இறக்கவும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்