பூண்டு இட்லி

செவ்வாய், 7 பிப்ரவரி 2012 (19:57 IST)
இ‌ட்‌லி, ரவா இ‌ட்‌லி, கா‌‌ஞ்‌சிபுர‌ம் இ‌ட்‌லி ஏ‌ன் குஷ்பு இ‌ட்‌லி கூட தெ‌ரியு‌ம். இது எ‌ன்ன பூ‌ண்டு இ‌ட்‌லி எ‌ன்‌கி‌றீ‌ர்களா, இதோ உ‌ங்களு‌க்காக...

என்ன தேவை?

அரிசி - 200 கிராம்
உளுந்து - 100 கிராம்
வெந்தயம் - 1 பிடி
பூண்டு - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
கடுகு, எண்ணெய் - தாளிக்க

எப்படி செய்வது?

ஊறவைத்த அரிசி, உளுந்து, வெந்தயத்தை இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

பூண்டை உரித்து வைத்துக் கொள்ளுங்கள். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு போட்டுத் தாளித்துக் கொண்டு, அதில் பூண்டையும் போட்டு லேசாக வதக்கிக் கொள்ளுங்கள்.

வதக்கிய பூண்டை இட்லி மாவில் கொட்டி கலந்து விடுங்கள்.

இதை இட்லிகளாக ஊற்றி வேகவைத்து எடுத்திட பூண்டு இட்லி ரெடி!

வெப்துனியாவைப் படிக்கவும்