பீட்ரூட் வடை

திங்கள், 10 டிசம்பர் 2012 (17:02 IST)
காய்கறி சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இந்த வகையில் உணவு தயாரித்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த முறையில் பீட்ரூட் மட்டுமின்றி பிற காய்கறிகளையும் பயன்படுத்தலாம்.

தேவையானவை:

பீட்ரூட் - 4
வெங்காயம் (நறுக்கியது) - 1 கப்
துவரம் பருப்பு - 200௦௦கிராம்
கா‌ய்‌ந்த மிளகாய் - 6
சீரகம் - 1/2 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைகேற்ப

செய்முறை:

துவரம் பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து அதனோடு கா‌ய்‌ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றை சேர்த்து வடை பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.

பீட்ரூட்டை துருவி கடாயில் எண்ணெய் சேர்க்காமல் லேசாக வறுத்துக் கொள்ளவும்.

இதனோடு நறுக்கிய வெங்காயம் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வறுத்து உப்பு மற்றும் அரைத்த விழுதினை சேர்க்கவும்.

தேவைபட்டால் தண்ணீர் சேர்த்து சிறு உருண்டைகளாக செய்து வடை போல் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்