கொள்ளு ரசம் மற்றும் கொள்ளு மசியல்

செவ்வாய், 26 பிப்ரவரி 2013 (19:49 IST)
FILE
கொள்ளு சூப் மற்றும் கொள்ளு குழம்பின் தொடர்ச்சியாக கொள்ளு ரசம், மற்றும் கொள்ளு மசியல் செய்யும் முறை இன்று பார்க்கலாம். கொள்ளு ரசம் சாதத்தோடு மட்டுமல்லாமல் வெறும் ரசத்தைக் கொஞ்சம் பூண்டு போட்டு குடிப்பதன் மூலம் நெஞ்செரிச்சல் மற்றும் வயிறு பொருமல் மற்றும் வயிறு உப்பசம் ஆகிய தொந்தரவுகள் நீங்கும்.

கொள்ளு ரசம்

கொள்ளு - 1 கப்
வரமிளகாய் - 3
மல்லி - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
கருவேப்பிலை
பெரிய வெங்காயம் - 1/2 அல்லது சின்ன வெங்காயம் - 8 நறுக்கியது
பூண்டு - 3 பல் நறுக்கியது
எண்ணெய்
கடுகு

செய்முறை:

கொள்ளை குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும் வரை வைத்து எடுக்கவும் வேக வைத்த கொள்ளு, வரமிளகாய், மல்லி, சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும். வேண்டுமானால் வேக வைத்த தண்ணீர் சேர்க்கலாம். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை தாளித்து வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து ஒரு கொதி விட்டு எடுக்கவும்.

கொள்ளு மசியல்

கொள்ளு - 200 கிராம்
சீரகம் - 1 டீஸ்பூன்
தனியா - 1 டீஸ்பூன்
தக்காளி - 2
காய்ந்த மிளகாய் - 4
பூண்டு - 5 பல்
சிறிய வெங்காயம் - 10
புளி - நெல்லிக்காய் அளவில் பாதி
கறிவேப்பிலை - 10 இலைகள்
கொத்தமல்லி இலை - சிறிது
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும். (ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை சிவக்க வறுத்துக்கொள்ளவும்) அரைத்தக் கலவையில் 5 டம்ளர் (தேவையான) தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வரமிளகாய, கருவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்