கருணைகிழங்கு பக்கோடா

வியாழன், 17 ஜனவரி 2013 (18:43 IST)
கருணை கிழங்கில் பல நல்ல சத்துக்கள் இருக்கின்றன. கருணை கிழங்கை வழக்கமான வறுவல் போல் செய்யாமல், இப்படி பக்கோடாக்களாக செய்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.

தேவையானவை

கருணை கிழங்கு - 1/2 கிலோ
கடலை மாவு - 1/4 கப்
சோள மாவு - 2 ஸ்பூன்
அரிசி மாவு - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
பூண்டு - 5
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைகேற்ப

செய்முறை

கருணை கிழங்கை தோலுரித்து, சிறு துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சிறிது மஞ்சள் தூள், கருணை கிழங்கு சேர்த்து வேகவைக்கவும்.வேகவைத்த கிழங்கை தனியே வைக்கவும்

சீரகம் மற்றும் பூண்டை அரைத்து, அதனோடு மிளகாய் தூள், கடலை மாவு, சோள மாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து பேசியாவும். இந்த கலவையில் நிறைய தண்ணீர் சேர்க்க கூடாது.

தயாரித்த கலவையுடன் வேகவைத்த கருணை கிழங்கை சேர்த்து கலந்து சிறிது நேரம் கழித்து எண்ணெய்யில் பொரிதெடுத்தால் மொறுமொறுப்பான சுவைமிகுந்த கருணை கிழங்கு பக்கோடா தயார்

வெப்துனியாவைப் படிக்கவும்