பெரிய கத்தரிக்காய் - 1 பூண்டு - 4 பல் இஞ்சி - சிறிய துண்டு எண்ணெய் - 3 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு பெரிய வெங்காயம் - 3 பச்சை மிளகாய் - 3 மிளகாய்த்தூள் - 1/4 தேக்கரண்டி தக்காளி சாறு - 1 கப் கொத்துமல்லி - சிறிதளவு
செய்யும் முறை
கத்தரிக்காயை அங்கங்கே கத்தியால் குத்தி, மேலே எண்ணெய் தடவி, `மைக்ரோ ஹை'யில் 10 நிமிடங்கள் வைக்கவும்.
கத்தரிக்காயின் தோலை உரித்து எடுத்துவிட்டு உள்ளிருக்கும் பாகத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு மசிக்கவும்.'
மைக்ரோவேவ் பாத்திரத்தில் எண்ணெயை விட்டு, அதில் நறுக்கிய பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம், இஞ்சி ஆகியவற்றைப் போட்டு 2 நிமிடங்கள் `மைக்ரோ ஹை'யில் வைக்கவும்.
வெந்த கத்தரிக்காய், மிளகாய்த்தூள், உப்பு, தக்காளி சாறு ஆகியவற்றைக் கலந்து 8 நிமிடங்கள் `மைக்ரோ ஹை'யில் சமைக்கவும்.