பூஜை அறை அமைப்பதற்கு மிகவும் பொருத்தமான இடம் வடகிழக்கு பகுதியாகும். இந்த அறையில் காற்றோட்டம் இறக்கிற வகையிலும், நன்றாக சூரிய ஒளி வருகிற மாதிரியும் பார்த்துக்கொண்டால் வீட்டில் செல்வ வளம் மிகவும் அதிகரிக்கும்.
மற்ற பகுதியில் உள்ள தரை தளத்தை விட இந்த ஈசான்ய மூலையில் உள்ள தரை தளம் சற்று பள்ளமாகவே இருக்க வேண்டும். இந்த ஈசான்ய மூலை அறையில் கண்டிப்பாக சமையல் அறை அமைக்கக்கூடாது, அப்படி அமைத்தால் தீய பலன்கள் விளையும்.
வடகிழக்கு அறையில் தெற்கு, தென்கிழக்கு பகுதியில் நுழைவு வாயில் அமைத்து கொள்ள வேண்டும், இளம்வயதினர் இந்த அறையில் தூங்கும் போது அவர்கள் நல்ல சுருசுருப்பனவர்களாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பார்கள்.
வடகிழக்கு மூலையில் வரக்கூடாதவை: குடும்ப தலைவன்,தலைவி படுத்து உறங்கும் அறை, குளியலறை, சமையல் அறை, பொருட்கள் சேமிக்கும் அறை உட்புற மூலை படிக்கட்டு, வெளிப்புற மூலை படிக்கட்டு, கழிவுநீர் தொட்டி, மேல்நிலை தண்ணீர் தொட்டி, மரங்கள், இன்வேர்ட்டர் யுபிஸ் மற்றும் மின்சார பாக்ஸ்,ஜெனரேட்ட்டர் போர்டிகோ.