மேற்கு பார்த்த கடை:
வடகிழக்கு மூலை சிறிது தாழ்வாக அமைய வேண்டும். காசாளர் தென் மேற்கு மூலையில் வடக்கு பார்த்து அமர வேண்டும். அவரது இடது கை புறம் பண பெட்டியை வைக்க வேண்டும். கிழக்கு பார்த்து அமர்ந்தால் பண பெட்டி அவரது வலது புறம் அமைய வேண்டும் வடமேற்கு மூலையிலோ அல்லது தென் கிழக்கு மூலையிலோ, வடகிழக்கு மூலையிலோ அமரக் கூடாது.
வடக்கு பார்த்த கடை:
வடகிழக்கு மூலையை சிறிது தாழ்வாக அமைக்க வேண்டும். காசாளர் வடமேற்கு மூலையில் கிழக்கு நோக்கி அமர்ந்தால் பண பெட்டியை வலது புறம் அமைக்க வேண்டும். வடக்கு பார்த்து அமர்ந்தால் பண பெட்டி அவரது இடது கை புறம் இருக்க வேண்டும். தென் மேற்கு மூலையிலும் அமரலாம். ஆனால் தென் கிழக்கு அல்லது வடகிழக்கு மூலையில் அமரக் கூடாது.