வாஸ்து நாள் வழிபாட்டு சிறப்புக்களும் பலன்களும் !!

புதன், 27 ஜூலை 2022 (10:28 IST)
வாஸ்து நாளில், வாஸ்து பகவானை வழிபடுவது சிறப்பு. இல்லத்தின் திருஷ்டியைப் போக்கி, தொழிலில் மேன்மையும் உத்தியோகத்தில் உயர்வும் தந்து அருளுவார் வாஸ்து பகவான். இன்று வாஸ்து நாள்.


வாஸ்து பகவான் கண் விழிக்கும் நாளே வாஸ்து நாள் எனப்படுகிறது. சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி என எட்டு மாதங்களில் வரும் வாஸ்து நாட்களில் பூமி பூஜை செய்யலாம்.

ஒரு வருடத்தில் எட்டு வாஸ்து நாட்கள் மட்டுமே வரும். அந்த எட்டு நாள்களிலும் வாஸ்து புருஷன் ஒன்றரை மணிநேரம்தான் கண் விழித்திருப்பார்.

வாஸ்து பகவான் விழித்திருக்கும் நாட்களில் ஒருநாளில் ஒன்றரை மணி நேரம் மட்டுமே விழித்திருப்பார் என்கிறார்கள் ஜோதிடர்கள். அப்படி அவர் விழித்ததும் காலையிலேயே நீராடுவார் என்றும் பூஜைகள் செய்வார் என்றும் ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.  இதையடுத்து பூஜைக்குப் பின்னர் உணவு எடுத்துக் கொள்ளுவார்.  அப்படி நிம்மதியும் நிறைவுமாக இருக்கும் தருணம்தான், வாஸ்து பூஜைக்கான நேரம். பூமி பூஜைக்கான நேரமாகும்.

வாஸ்து புருஷனை, கீழே தள்ளி அவன் மேல் 53 தேவதைகள் அவன் முதுகில் அமர்ந்த இடம் தான் வாஸ்து மண்டலம் என்று குறிப்பிடப்படுகிறது. வாஸ்து மண்டலம் சதுரமாக அமைந்திருக்கும். வாஸ்துவை பிரம்மதேவன் காப்பாற்றி அருளியதால், வீட்டின் நடுபாகம் பிரம்மாவுக்காக கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனை பிரம்ம ஸ்தானம் என்றே விவரிக்கிறது மனையடி சாஸ்திரம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்