அனைத்து வாஸ்து தோஷங்களை நீக்கும் பரிகாரங்கள்...!

வீட்டில் உண்டான தோஷங்கள் விலகவும் வாஸ்து பகவானை நினைத்து பூஜைகள் செய்ய ஏற்ற வாஸ்து நாளில் இவ்வாறு பூஜை செய்வதால் அனைத்து கஷ்டங்களும் தீரும்.
கல்யாணம் பண்ணிப் பார், வீட்டை கட்டிப் பார் என்பார்கள். கலயாணம் எனும் வைபவம் நடப்பதற்கு குருவருள் தேவை. அதேபோல் வீடு  அமைவதற்கு வாஸ்து பகவானின் பேரருள் மிக அவசியம்.
 
இறையருளும் குருவருளும் இருந்தால்தான், வாஸ்து பகவானின் அருளும் கிட்டும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். சொந்த வீடா அல்லது வாடகை வீடா என்பது முக்கியமில்லை. நாம் இருக்கும் வீட்டில், வாஸ்து பகவானின் ஆட்சியும் நம் எண்ணங்களுமே  குடியிருக்கின்றன. ஆகவே நம் எண்ணங்களை நாம் சரிவர வைத்துக் கொள்ளவேண்டும். அதேபோல், வாஸ்து பகவானை ஆராதிக்கவேண்டும்.
 
மிகப்பெரிய வீடு கட்டி வசித்து வந்தாலும், அங்கு எப்போதும் சண்டை, சச்சரவு, நோய், சிகிச்சை என்று வாழ்க்கை சிக்கலாகவும், குழப்பமாகவும், நிம்மதி இல்லாமலும் ஆரோக்கியம் இல்லாமலும் இருக்கும். இப்படி இருந்தால், வாஸ்து பகவானை அங்கே  குளிரப்படுத்தவில்லை அல்லது சாந்தப்படுத்தவில்லை என்று அர்த்தம் என்கிறார்கள் ஜோதிடர்கள்.
 
வாஸ்து பகவானுக்கு உரிய நாளில், வாஸ்து தோஷம் கழிப்பதற்கு சிறப்பான நாள். எனவே அன்றைய நாளில் வீட்டை ஒட்டடை அடித்து கழுவி சுத்தப்படுத்தி மாலையில் விளக்கேற்றுகள். லலிதாசகஸ்ரநாமம் முதலான ஸ்லோகங்களை பாடி, தூபம் காட்டி நைவேத்தியம் செய்து  காகத்துக்கு வைப்பதால், உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நிம்மதியும் நிறைவுமாக வாழ செய்வார் வாஸ்து பகவான்.
 
முடிந்தால் உச்சி வேளையில், எலுமிச்சையால் வீட்டை திருஷ்டி சுற்றி நான்கு பக்கங்களிலும் போடுங்கள். வீட்டில் இருந்த கண் திருஷ்டி  விலகிவிடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்