வாஸ்து முறைப்படி நான்கு மூலைகளில் இருக்கக் கூடாத பொருட்களைப் பற்றி பார்ப்போம்....!

வாஸ்து முறையுடன் அமைந்த வீட்டில் அமைதுயும், அன்பும், செல்வமும் பொங்கி வழியும். இங்கு முக்கியமான மூலைகளான ஈசான மூலை, அக்னி மூலை, குபேர மூலை, கன்னி மூலை ஆகிய மூலைகளில் இருக்கவேண்டிய இருக்கக் கூடாத பொருட்களைப் பற்றி பார்ப்போம். 
தென்கிழக்கு மூலையை அக்னி மூலை என்று அழைப்பர். பூஜை அறை தென்கிழக்கு மூலையில் அமைக்கலாம். அக்னி மூலையில் குடிநீர், நிலைப்பேழை, கழிவறை, குளியலறை இருக்கக்கூடாது.
 
அக்னி மூலையில் சமையலறை அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்க முடியாமல் போனால் கிழக்கு முகமாக அமைக்கலாம் அல்லது அடுப்பு, எரிவாயு போன்றவை இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம்.
 
கழிப்பறை, குளியல் அறைகளை வடமேற்கு (வாயு) மூலையில் அமைக்கவும். சில இடங்களில் விதிவிலக்காக இந்திரன் (கிழக்கில்) மூலையில்  கழிப்பறை அமைக்கலாம்.
 
ஈசான மூலை (வடகிழக்கு) வழியேயே சகல சௌபாக்கியங்களும் வீட்டிற்குள் வருகின்றது, எனவே இம்மூலையை சுத்தமாக வைக்க  வேண்டும்.
 
பூஜையறை, குழந்தைகள் படிப்பறை, படுக்கையறை, வயது முதிர்ந்தவர்களின் படுக்கையறைகளை ஆகியவை ஈசான மூலையில்  அமைக்கலாம்.
வீட்டின் கன்னி மூலை எப்போதும் அடைத்து வைத்திருப்பது நல்லது. கன்னி மூலையில் படுக்கை அறை அமைத்து கட்டிலுக்கு அடியில்  பழைய சாமான்கள் வைப்பது கூடாது. அது உடல் ஆரோக்கியத்தை மேலும் கெடுத்துவிடுமாம்.
 
மேற்கு மற்றும் தெற்கு தலை வைத்துப் படுப்பது நல்லது. தலைக்கு அடியில் தங்கம், பணம், பத்திரம் போன்றவற்றை வைத்து படுக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் சீக்கிரமே பொருள் நம் கையை விட்டுப் போய் விட வாய்ப்புள்ளது.
 
வடகிழக்கு மூலை எப்போதும் சுத்தமாகவும், ஒழுங்காகவும் பராமரிக்கப்பட வேண்டும். தேவையற்ற பொருட்கள் எதுவும் அந்த மூலையில்  வைக்கக் கூடாது.
 
வீட்டின் வடகிழக்கு மூலையில் எந்த உயர்ந்த கட்டிடமும் இருக்கக் கூடாது. அத்தகைய கட்டிடத்தின் நிழல் உங்கள் வீட்டின் மேல் விழுவது  நல்லது இல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்