பூமி பூஜை செய்தல் அவசியமா?; என்ன சொல்கிறது வாஸ்து...?
வீடு கட்ட ஆரம்பிக்கும் முன் அல்லது செப்பனிட ஆரம்பிக்கும் முன் சரியான நேரத்தில் அருகம்புல், துளசி கொண்டு மனையின் ஈசானியத்தில் வாஸ்து பூஜை (பூமி பூஜை) செய்தல் மிக நல்லது.
வீட்டை செப்பனிடும் முன் வாஸ்து நிபுணர்களைக் கொண்டு தீர நிதானமாக ஆராய்ந்த பின் பழுது பார்க்கும் பணியை வேகமாகவும் கவனமாகவும் செய்ய முடிக்க வேண்டும்.
வீடு பழுது பார்க்கும் பணிகளை மெதுவாகச் செய்தாலும் பரவாயில்லை. பாதியில் நிறுத்தவேக் கூடாது.
வீட்டில் தலைவாசல் அமைக்கும் போது கட்டிடத்தின் முன்பக்கத்தினை அளந்து அதை 9 சம பாகங்களாக்கி 4, 5, 6வது பாகங்களில் தகுதியான இடத்தில் தலைவாசல் அமைக்கலாம்.
எதிர்வீட்டின் தலைவாசலுக்கு எதிரில் நம் வீட்டு தலைவாசல் இருக்கவே கூடாது. தினமும் பூஜையறையில் தெய்வ பிரார்த்தனை செய்தல் வேண்டும். விளக்கு ஏற்ற வேண்டும். நறுமண பத்தி உபயோகப்படுத்துங்கள். தலைவாசல், கடைவாசல் நேர் எதிரில் சூரிய ஒளிபடியுமிடமான முற்றத்தில் துளசி மடம் அமைத்து வழிபடுதல் நல்லது.
ஒரு வீட்டினை இருவருக்கு பங்கிட்டு பாகப்பிரிவினைச் செய்ய கூடாது. ஒரே மனையில் 2 வீடுகள் கட்ட விரும்பினால் முதலில் தெற்கு அல்லது மேற்கு பகுதியில் கட்ட வேண்டும். பிறகு தான் வடக்கு அல்லது கிழக்கிலுள்ள காலி மனையில் வீடு கட்டலாம்.
ஓரே மனையில் 2 வீடுகள் கட்டினால் தெற்கிலுள்ள வீட்டை விட வடக்கில் உள்ள வீடு தாழ்வாகவும், மேற்கில் உள்ள வீட்டை விட கிழக்கில் உள்ள வீடு தாழ்வாகவும் இருக்க வேண்டும்.
ஒரு வீட்டு மனையின் எதிரே ஒரு தெரு முடிவதையே தெருக்குத்து அல்லது வீதி சூலம் எனலாம், வடக்கு ஈசானிய தெருக்குத்தும் கிழக்கு ஈசானிய தெருக்குத்தும் வீட்டிற்கு நன்மை தருவனவாம்.