கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி (Sump) அமைக்கும் முறை

வெள்ளி, 26 பிப்ரவரி 2016 (20:00 IST)
இன்றைய காலகட்டதில் நீரின் பற்றாக்குறை அதிகரிப்பதை அடுத்து, ஒரு வீட்டிற்கோ, ஒரு தொழிற்சாலைக்கோ அல்லது ஒரு நிறுவனத்திற்கோ தங்களது தேவைக்காக கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பது அவசியமான ஒன்றாகும். வாஸ்து படி ஒரு இடத்தில் கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் முறை.


 
 
ஒரு இடத்திற்கு கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை வடகிழக்கு பகுதியில் வடக்கு அல்லது கிழக்கு திசையில் அமைத்துக் கொள்ளலாம்.
 
கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஒரு கட்டடத்தின் தாய் சுவரையும், மற்றும் அந்த இடத்தின் மதிற்சுவரையும் ஒட்டாமல் அமைக்க வேண்டும்.
 
கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மேல் பகுதி தரை தளத்தோடு சமமாக இருக்க வேண்டும்.
 
த‌விர, ஒரு இடத்தின் வடமேற்கு, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் கட்டாயம் அமைக்கக் கூடாது. 

வெப்துனியாவைப் படிக்கவும்