வெறும் நிலா வெளிச்சத்தில் படம் பிடிக்கப்பட்ட நடனம் : வீடியோ
புதன், 23 டிசம்பர் 2015 (11:09 IST)
நிலா வெளிச்சத்தை மட்டுமே துணையாக வைத்துக் கொண்டு ஒரு பெண் நடனம் ஆடும் ஒரு வீடியோ எடுக்கப்பட்டிருக்கிறது.
எந்த விளக்குகளும் இல்லாமல், வெறும் நிலா வெளிச்சத்தை கொண்டு அந்த நடனம் எடுக்கப்பட்டிருக்கிறது. ஹாங்காங்கைச் சேர்ந்த டி-சினிமாட்டிக் என்ற நிறுவனம் “லூனா” என்ற தலைப்பில் நடன குறும்படமாக அந்த வீடியோவை எடுத்துள்ளது.
சோனி நிறுவனத்தில் A7SII வகை கேமராவை பயன்படுத்தீ 4K தரத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை சோனி நிறுவனம் தனது விளம்பரத்திற்கு பயன்படுத்தி வருகிறது.