நேர்மையான அதிகாரி என்று மக்களாலும், இளைஞர்களாலும் அழைக்கப்படும், ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
கலெக்டராக பதவி ஏற்றதிலிருந்து நேர்மையாக செயல்பட்டு வருபவர் சகாயம். லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து என்று தன்னுடைய அலுவலகத்தில் எழுதி வைத்திருப்பர். எந்த பணியிலும் நேர்மையை கடைபிடிப்பவர். சமீபத்தில் இவருக்கு அளிக்கப்பட்ட கிரனைட் ஊழல் பற்றிய விசாரணையையும் நேர்மையாக முடித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், சகாயம் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் லஞ்சம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்பது முதல், இளைஞர்களுக்கு பல அறிவுரைகளை அதில் சகாயம் கூறியுள்ளார்.