கொசுவலை அவ‌சிய‌‌ம்

வெள்ளி, 14 ஆகஸ்ட் 2009 (12:57 IST)
கோடை கால‌த்தை எ‌ப்படியோ ஓ‌ட்டி‌வி‌ட்டா‌ச்சு. ஆனா‌ல் வருவது மழை ம‌ற்று‌ம் கு‌ளி‌ர்கால‌ம். கொசு‌க்க‌ளி‌ன் தொ‌ல்லை அ‌திக‌ரி‌த்து‌விடு‌ம்.

கொசுவை ஒ‌ழி‌க்க பல வ‌ழிகளை‌க் கையா‌ண்டாலு‌ம் கொசு‌க்க‌ள் ம‌ட்டு‌ம் ஒ‌ழிவ‌தி‌ல்லை எ‌ன்று பெரு‌ம்பாலு‌ம் எ‌ல்லோரு‌ம் புல‌ம்புவதுதா‌ன்.

கொசுவை ஒ‌ழி‌க்க ஜ‌ன்ன‌ல்க‌ளி‌ல் கொசுவலையை மா‌ட்டி ‌விடு‌ங்க‌ள்.

அதுவு‌ம் குழ‌ந்தைக‌ள் இரு‌க்கு‌ம் ‌வீடுகளாக இரு‌ந்தா‌ல் ‌நி‌ச்சயமாக மாலை நேர‌த்‌தி‌ல் ஜ‌ன்ன‌ல் ம‌ற்று‌ம் கதவுகளை மூடி வை‌க்கவு‌ம்.

பொதுவாக கொசுவை ‌விர‌ட்டு‌ம் ‌திரவ‌ங்களு‌ம், புகை உ‌ண்டா‌க்‌கிகளு‌ம் நம‌க்கு‌த்தா‌ன் பகையாக அமையு‌ம் எ‌ன்பதை ‌நினை‌வி‌ல் கொ‌ள்ளவு‌ம்.

ஏ‌ற்கனவே உ‌ங்க‌ள் ‌வீ‌ட்டி‌ல் இரு‌க்கு‌ம் கொசுவலையில் சிறிய துளைகள் ஏற்பட்டிருந்தால், அவற்றை அடைக்க, கடைகளில் கலர் கலராக விற்கப்படும் ஸ்டிக்கர்களை வா‌ங்‌கி அ‌தி‌ல் ஒ‌‌ட்டி‌விடு‌ங்க‌ள். ஓ‌ட்டையு‌ம் ச‌ரியா‌ச்சு, அல‌ங்காரமு‌ம் ஆயா‌ச்சு.

வெப்துனியாவைப் படிக்கவும்