ரயில்வேயின் வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் சென்ற வருடத்தின் பத்து மாதங்களை விட 12.84 விழுக்காடு அதிகரித்துள்ளது.
இந்த நிதி ஆண்டில் 2007 ஏப்ரல் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை ரூ.57,282.51 கோடி வருவாய் வந்துள்ளது.
(சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் வருவாய் ரூ.50,765.01 கோடி)
இந்த பத்து மாதத்தில் சரக்கு கட்டணம் வருவாய் ரூ.38,747.90 கோடியாக இருக்கின்றது. (சென்ற வருடம் ரூ.34,415.58 கோடி).
இது சென்ற வருடத்தைவிட 12.59 விழுக்காடு அதிகம்.
பயணிகள் கட்டண வருவாய் ரூ.16,134.95 கோடியாக இருக்கின்றது. (சென்ற ஆண்டு ரூ.14,126.97 கோடி) இது 14.21 விழுக்காடு உயர்வு.
மற்ற இனங்களின் வருவாய் ரூ. 2,399.66 கோடி. (சென்ற ஆண்டு ரூ.2,222.46 கோடி). இது 7.97 விழுக்காடு அதிகம்.
இந்த பத்து மாதத்தில் சுமார் 5559.87 மில்லியன் பேர் பயணம் செய்துள்ளனர். (சென்ற ஆண்டு 5267.44 மில்லியன் )
புறநகர் ரயில்களில் சுமார் 3074.10 மில்லியன் பேர் பயணம் செய்துள்ளனர். புறநகர் அல்லாத மற்ற குறைந்த தூர ரயில்களில் 2485.77 மில்லியன் பேர் பயணம் செய்துள்ளனர்.