பட்ஜெட் 2018-19: விவசாயிகளின் ஏதிர்ப்பார்ப்பை பூர்த்திசெய்யுமா அரசு?

Webdunia
திங்கள், 29 ஜனவரி 2018 (16:55 IST)
2018-19 ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. 2019 பொதுத்தேர்தலுக்கு முன்னர் நடக்கும் கடைசி பட்ஜெட் தாக்கல் என்பதால் மத்திய அரசு இதனை மிகவும் கவனத்துடன் கையாளும்.
 
குஜராத் தேர்தலில் வெற்றி பெற்றதை பாஜக மறக்காத நிலையில், கர்நாடகம், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அடுத்தடுத்து சட்டசபை தேர்தல் வரவுள்ளது. 
 
மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் எல்லாம் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். தேர்தலை கவனத்தில் வைத்து பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு அதிக சலுகை வழங்கப்படலாம் என தெரிகிறது. 
 
விவசாய விற்பனை மூலம் அதிக லாபம் பெரும் வகையில் சந்தை சீர்திருத்தங்கள் மேற்கொள்வது, பயிர் காப்பீட்டு திட்டம் ஆகியவற்றின் மூலம் மானியங்களை அதிகரிக்க நிதியமைச்சர் திட்டமிட்டு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
 
கடந்த 1965 ஆம் ஆண்டு வரை விவசாயிகளுக்கு என்று பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. மோடி அரசு 2022-ல் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவோம் என்று சபதம் எடுத்துள்ள நிலையில் இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்