விவசாயமும் சினிமாவும் ஒன்று: வேதனையுடன் குரல் கொடுத்த விவேக்

வெள்ளி, 16 மார்ச் 2018 (13:54 IST)
தமிழகத்தில் விவசாயமும் சினிமாவும் ஒன்று என்றும், இரண்டும் கவனிக்க ஆள் இல்லாமல் செத்து கொண்டிருப்பதாகவும் நடிகர் விவேக் வேதனையுடன் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது: தமிழ் நாட்டில் இறந்து கொண்டிருக்கும் 2 விஷயங்கள். 1. விவசாயம் 2. சினிமா. அதை அழிப்பது வரண்ட நீர் நிலை, காணாமல் போன ஆறுகள், மரங்கள் ,மீத்தேன் போன்ற திட்டங்கள்.இதை அழிப்பது வரைமுறை அற்ற வெளியீடு,fdfs இணைய விமர்சனங்கள்,கட்டண உயர்வு, சம்பள உயர்வு. அரசு தலையிடாமல் தீர்வு இல்லை' என்று விவேக் கூறியுள்ளார்

மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கைகள் வைத்து வரும் விவசாயிகள் இதுவரை தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காமல் உள்ளதாகவும், அதேபோல் இன்று முதல் திரையரங்குகள் மூடல், படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் இல்லாததால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையில்லாமல் கஷ்டப்படுவதாகவும், இந்த இரண்டு பிரச்சனைகளையும் அரசு மட்டுமே தீர்க்க முடியும் என்றும், எனவே அரசு இந்த பிரச்சனைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்