ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது பஞ்சாப்

வியாழன், 26 ஏப்ரல் 2018 (23:41 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடந்த விறுவிறுப்பான போட்டியில் அணி ஐதராபாத் அணி த்ரில் வெற்றி பெற்றது.
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின், பந்துவீச்சை தேர்வு செய்ததால் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 132 ரன்கள் எடுத்தது. பாண்டே 54 ரன்களும், ஷாகிப் அல் ஹசன் 28 ரன்களும், யூசுப் பதான் 21 ரன்களும் எடுத்தனர்.
 
இந்த நிலையில் வெற்றி பெற 133 ரன்கள் தேவை என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி, முதல் சில ஓவர்கள் அதிரடியாக விளையாடினாலும் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து வந்தது. இந்த நிலையில் பஞ்சாப் அணி 19.2 ஓவர்களில் 119 ரன்களுக்கு ஆட்டமிழந்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்