கமலின் அரசியல் பிரவேசம் ; எச்சரிக்கையாக இருங்கள் : எடப்பாடி ரியாக்‌ஷன்?

Webdunia
வியாழன், 22 பிப்ரவரி 2018 (12:19 IST)
கமல்ஹாசனை குறைவாக எடைபோட்டு விடக் கூடாது என நேற்று நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை நேற்று ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்திலிருந்து துவங்கினார். அதன்பின் மாலை மதுரை பொதுக்கூட்டத்தில் தனது கட்சி பெயரையும் கொடியையும் அறிமுகம் செய்தார். 
 
மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சி பெயரையும், சிவப்பு, வெள்ளை, கருப்பு ஆகிய நிறங்களுடன் ஒன்றிணைந்த கைகளோடு நடுவில் நட்சரத்திரத்துடன் உள்ள தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார்.
 
கமல்ஹாசன் அரசியல் அறிவிப்பை அறிவித்துக் கொண்டிருந்த பொது, அதிமுகவின் தலைமை அலுவலக்த்தில் எடப்பாடி தலைமையில், ஜெ.வின் பிறந்த நாளை எப்படிக் கொண்டாடுவது என்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில், துணை முதல்வர் ஓ.பி.எஸ், அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 
அப்போது, கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் குறித்தே அவர்கள் அதிகம் விவாதித்தாக கூறப்படுகிறது. ஆனால், கமல்ஹாசனை கண்டு பயம் கொள்ளத் தேவையில்லை. ராமேஸ்வரத்தில் அவரைக் காண பொதுமக்கள் கூடவில்லை. நடிகர் கமல்ஹாசனை பார்க்கவே கூட்டம் கூடியுள்ளது. அவர் தனது சொந்த செலவில்தான் பேனரை வைத்துள்ளார். அவரது ரசிகர்கள்  பெரிதாக பணம் செலவு செய்யவில்லை. ஷூட்டிங் செல்வது போலத்தான் கமல் எல்லா இடத்திற்கு சென்றுள்ளார். அவரை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை” என ஜெயக்குமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் கூறியுள்ளனர்.
 
ஆனாலும், “யாரையும் குறைவாக எடை போட்டுவிடக் கூடாது. எச்சரிக்கையாக இருங்கள்” என எடப்பாடி கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்