அடுத்த மத்திய அரசில் திமுக அமைச்சர்கள் உறுதி!

சனி, 19 ஜனவரி 2019 (22:52 IST)
காங்கிரஸ் கூட்டணியை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டு, அடுத்த பிரதமர் ராகுல்காந்திதான் என்று முழங்கிய திமுக தலைவர் முக ஸ்டாலின், இன்று கொல்கத்தாவில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டு மூன்றாவது அணியிலும் இருக்க வாய்ப்பு இருப்பதை சொல்லாமல் சொல்லி உள்ளார்.

மேலும் டிடிவி தினகரன் உள்பட ஒருசில தலைவர்கள் திமுக, பாஜகவுடன் மறைமுக கூட்டணி வைப்பதாகவும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். எனவே அடுத்த மத்திய அரசை பாஜக அமைத்தாலும், காங்கிரஸ் அமைத்தாலும் அல்லது மூன்றாவது அணி அமைத்தாலும் அதற்கு திமுக ஆதரவு உறுதி என்றும், அடுத்த மத்திய அரசில் திமுக அமைச்சர்கள் இருப்பது உறுதி என்றும் தமிழக அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றன.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தூ, தேர்தலுக்கு பின் யார் ஆட்சி அமைக்கின்றார்களோ அந்த கூட்டணிக்கு ஆதரவு கொடுத்து மத்திய அமைச்சரவையில் இடம் பிடிக்க திமுக திட்டமிட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்