நியூஸ் சேனலை கலாய்த்து தள்ளிய பொடியன் - வைரல் வீடியோ!

வியாழன், 15 ஜூலை 2021 (15:04 IST)
சமூகவலைத்தளங்களில் கடந்த இரண்டு நாட்களாக ரித்விக் என்ற குழந்தை வைரலாகி கொண்டிருக்கிறான். 7 வயதே ஆன அவன் பெயரில் (Rithu Rocks) ஒரு யூடியூப் சேனல். அதில் செய்தி வாசிப்பாளர் , ரிப்போர்ட்டர் , பொதுமக்கள் என அவனே பலவித கெட்டப்புகளை போட்டுக்கொண்டு பிரேக்கிங் நியூஸ் வாசித்து செம வைரலாகி கொண்டிருக்கிறான். 
 
தந்தை உதவி இயக்குநர் என்பதால்  வீடியோ கான்செப்ட் மற்றும் ஒளிப்பதிவு, டைரக்‌ஷன் என எல்லாமே அவரே பார்த்துக்கொள்ள ரிதுவின் தாய் காஸ்ட்டியூம் டிசைன் மற்றும் மேக்கப் கவனித்துக்கொள்கிறார். ரித்துவின் பிரேக்கிங் நியூஸ் வீடியோ ஒன்று ஒரே நைட்டில் செம ட்ரெண்ட் ஆகிவிட்டது. தற்போது அவரை பல பெரிய யூடியூப் சேனல்கள் அழைத்து நேர்காணல் எடுத்து வருகின்றனர். இதோ அந்த வைரல் குழந்தையின் திறமையை பாருங்கள்..
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்