கலைந்து செல்ல மறுத்த திமுக தொண்டர்கள் மீது லேசான தடியடி

Webdunia
ஞாயிறு, 29 ஜூலை 2018 (23:07 IST)
திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சற்றுமுன் அந்த மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கருணாநிதியின் உடல்நிலையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும் அவருக்கு அளிக்கப்பட்டு கொண்டிருக்கும் சிகிச்சையால் அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் காவேரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்களின் கூட்டம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து கொண்டே வருவதால் அவர்கள் அனைவரும் கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர். முன்னாள் திமுக அமைச்சர் ஆ.ராசா அவர்களும் தொண்டர்களிடையே கலைந்து செல்லுமாறு வேண்டுகோள் விடுத்தார். ஆனால் திமுக தொண்டர்கள் கொட்டும் மழையிலும் கலைந்து செல்ல மறுத்து காவேரி மருத்துவமனை முன்னர் கூடியுள்ளனர்.
 
இந்த நிலையில் காவேரி மருத்துவமனை முன் கூடியிருந்த திமுக தொண்டர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி தொண்டர்களை கலைத்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பதட்டநிலை உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்