கா‌ஞ்‌சி தல‌விரு‌ட்ச மாமர‌‌த்‌தி‌‌ன் ‌சிற‌ப்பு?

சனி, 30 ஏப்ரல் 2011 (19:54 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: காஞ்சி காமா‌ட்‌சி அ‌ம்ம‌னகோயிலில் தலவிருட்சமாக மாமரம் ஒன்று இருக்கிறது. அந்த மாமரத்தின் மகிமை பற்றி சொல்லுங்கள்?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: பன்னெடுங்காலமாக அந்த மாமரம் இருக்கிறது. அந்த இலைகள் எல்லாமே மருத்துவ குணம் கொண்டவை. இந்த ஒரே மரத்தில் பல விதமான சுவைகளைக் கொண்ட கனிகள் காய்க்கும். பெரியவர்கள் சிலர் ருசித்தும், சிலர் சொல்லியும் கேட்டிருக்கிறோம். தற்போதும் அந்த மரம் இருக்கிறது. முன்பு கொஞ்சம் பின்னமாகி இருந்தது. தற்போது அதை உயிர்ப்பித்து புதுப்பித்திருக்கிறார்கள்.

அந்த தலவிருட்சத்திற்கு நிறைய சக்திகள் இருக்கிறது. அந்த இலையை சாப்பிட்டு ஒரு பெண் கர்ப்பிணி ஆனார் என்று எனக்குத் தெரிந்த ஒருத்தர் சொல்லியிருக்கிறார். அந்த அளவிற்கு மருத்துவ குணங்கள் அந்த தல விருட்சத்திற்கு உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்