சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் - விளக்கம்

திங்கள், 21 பிப்ரவரி 2011 (19:14 IST)
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி. சட்டி என்றால் மண் பானை சட்டி என்று நினைத்துக் கொள்கிறோம். அது அப்படி கிடையாது.

சஷ்டி திதி. அந்த சஷ்டி திதியைத்தான் தூயத் தமிழில் சட்டி திதி என்று சொல்வார்கள். இன்னமும் ஈழத் தமிழர்கள் சட்டி திதி என்றுதான் சொல்வார்கள். இங்குதான் சஷ்டி திதி என்று சொல்கிறோம்.

இந்த சட்டி திதியில் விரதங்கள் இருந்தால் குழந்தை பாக்கியம் உறுதியாகக் கிடைக்கும். அகப்பை என்பது உள்ளிருக்கும் கர்ப்பப்பையைக் குறிக்கிறது. அந்தத் திதியில் விரதம் இருந்தால் அகத்தில் இருக்கும் கருப்பை கருத்தரிக்கும் என்பது அர்த்தம்.

அதனால்தான் சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்று முன்னோர்கள் சொல்லிவைத்தார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்