கர்நாட மாநிலத்தில் காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இதனால், கபினி, கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட பெரும்பாலான அணைகள் நிரம்பி வருகின்றன.
இந்நிலையில், பாதுகாப்பு கருதி கபினி, கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட அணைகளிலிருந்து உபரி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த உபரி நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வந்தடைந்தது.
இதன் காரணமாக, ஒகேனக்கல் அருவியில், நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கலில் சனிக்கிழமை அன்று நொடிக்கு 6,000 கன அடியாகவும், ஞாயிறு அன்று நொடிக்கு 11,500 கன அடி நீர் வருவதாகப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
ஒகேனக்கல் அருவியில், அதிக அளவு நீர்வரத்து இருப்பதாகச் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குத் தகவல் பரவியது இதனையடுத்து, சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கலில் குளித்து மகிழ்ந்தனர்.