வாக்காளர் அட்டை இல்லாதவர்களும் வாக்களிக்கலாம்: எப்படி?

கே.என்.வடிவேல்

வெள்ளி, 13 மே 2016 (16:45 IST)
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்ட மன்றத் தேர்தலில் வாக்களிக்க, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப் இல்லை என்றாலும் கூட, மாற்று ஆவணங்களை காட்டி வாக்களிக்கமுடியும். இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
 

 
வாக்காளர்கள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள மாற்று ஆவணங்கள்:
 
1. ஆதார் அட்டை
 
2. டிரைவிங்க லைசென்ஸ்
 
3.  பான் கார்டு (வருமான வரி கணக்கு அட்டை)
 
4. மத்திய - மாநில அரசுகள் மற்றம் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் தங்களது போட்டோ ஒட்டப்பட்ட அடையாள அட்டை
 
5. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் - போஸ்ட் ஆபிஸ் கொடுத்துள்ள போட்டோ ஒட்டப்பட்ட சேமிப்பு கணக்குப் புத்தகம்
 
6. தேசிய மக்கள் தொகை பதிவேடு வழங்கியுள்ள ஸ்மார்ட் அட்டை
 
7. நூறு நாள் வேலைத் திட்ட அட்டை
 
8. மத்திய தொழிலாளர் நலத் துறை வழங்கிய சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை
 
9. புகைப்படம் ஒட்டப்பட்ட ஓய்வூதிய ஆவணப் புத்தகம்
 
10. சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசு வழங்கியுள்ள அடையாள அட்டை போன்றவற்றை காண்பித்து வாக்களிக்க ஏற்பாடு செய்துள்ளது
 
எனவே, வாக்காளர்கள் எந்தவித தயக்கமும் இன்றி வாக்குச்சாவடிக்கு சென்று தங்களது வாக்கை பதிவு செய்யலாம்
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 

வெப்துனியாவைப் படிக்கவும்