சமக தலைவர் சரத்குமார் ஒட்டுப் போடவில்லை

செவ்வாய், 17 மே 2016 (12:04 IST)
சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் இந்த தேர்தலில் ஓட்டுப்போடவில்லை.


 

 
அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, சட்ட மன்ற தேர்தலை சந்தித்த சரத்குமார், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டார். 
 
அவருக்கு ஒட்டு சென்னையில் உள்ளது. ஆனால் தேர்தல் நாளான அன்று, அவர் தனது தொகுதியான திருச்செந்தூரில் இருந்தார். அதனால் அவர் ஒட்டுப்போடவில்லை. 
 
தபால் மூலம் ஒட்டுப்போட முடியுமா என்று முயற்சி செய்த போது, தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்களுக்கு மட்டுமே தபால் ஓட்டு போட முடியும். வேட்பாளர்கள் தபால் ஓட்டு போட முடியாது என்று தேர்தல் அதிகாரிகள் கை விரித்து விட்டனர். இதனால், சரத்குமார் ஓட்டுப்போட வில்லை.
 
அதேபோல், திமுக கூட்டணியில் உள்ள புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமிக்கு ஓட்டு கோயம்புத்தூரில் உள்ளது. ஆனால் அவர் தனது தொகுதியான ஒட்டப்பிடாரத்தில் இருந்தார். இதனால் அவரும் ஒட்டளிக்கவில்லை. கடந்த மூன்று தேர்தலில் அவர் ஓட்டளிக்கவில்லை.
 
தங்களுக்கு வாக்களியுங்கள் என்று மக்களிடம் வேண்டுகோள் வைக்கும் தலைவர்களே ஓட்டுப் போடாமல் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்