வேட்புமனு தாக்கல் செய்தார் மு.க.ஸ்டாலின்

புதன், 27 ஏப்ரல் 2016 (14:27 IST)
கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.


 

 
2016 சட்டமன்ற தேர்தலில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
 
இந்நிலையில், அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்படி, அயனாவரம் மாநகராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்த மு.க.ஸ்டாலின், அங்கு தேர்தல் அலுவலர் கார்த்திகாவிடம் தனது வேட்பு மனுவை கொடுத்தார்.
 
இதைத் தொடர்ந்து, அங்கு குழுமியிருந்த கட்சித் தொண்டர்கள் பலத்த ஆரவாரம் எழுப்பி தங்கள் மகிழச்சியை தெரிவித்தனர்.
 
கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்