ஐ.என்.டி.யூ.சி. குற்றச்சாட்டு - இளங்கோவன் மறுப்பு

திங்கள், 2 மே 2016 (23:20 IST)
ஐ.என்.டி.யூ.சி-இன் தலைவர் காளன் குற்றச்சாட்டை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன் மறுத்துள்ளார்.
 

 
அதிமுக பொதுச் செயலாளரான, ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு அளித்துவிட்டு பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஐ.என்.டி.யூ.சி-இன் தலைவர் காளன் தலைமையிலான தொழிற்சங்கத்தினர், காங்கிரஸ் கட்சியில் தேர்தலில் போட்டியிட இளங்கோவன் போடியிட வாய்ப்பு தரவில்லை, வாரிசுகளுக்கும் பணம் கொடுத்தவர்களுக்கும் காங்கிரஸ் கட்சி சீட் வழங்கியுள்ளார். இதனால் நாங்கள் அதிமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக கூறினார்.
 
இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன், ஐ.என்.டி.யூ.சி.க்கு 2 சீட் வழங்கியுள்ளதாகவும், தேர்தல் வந்தாலே, ஜெயலலிதா பாசம் காளானுக்கு வந்துவிடுகிறது என பதிலுக்கு குற்றம் சாட்டினார்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

 

வெப்துனியாவைப் படிக்கவும்