வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் உடனே கைது: ராஜேஷ் லக்கானி எச்சரிக்கை

திங்கள், 9 மே 2016 (07:00 IST)
வாக்காளர்களுக்கு யார் பணம் கொடுத்தாலும்,  அதை கையும், களவுமாக அதிகாரிகள் பிடித்துவிட்டால் அவர்கள் உடனே கைது செய்யப்படுவார்கள் என  ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
 

 
சென்னையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி  ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
தமிழக சட்டசபை தேர்தலில் பண நடமாட்டத்தை தடுக்க 234 தொகுதிகளிலும் பறக்கும் படையினர் எண்ணிக்கை மூன்றிருந்து 5 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. பறக்கும் படையில் 118 பயிற்சி ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு பறக்கும் படையிலும் தமிழக போலீசாருக்கு பதிலாக துணை ராணுவ வீரர் இடம் பெற்று உள்ளார். அத்துடன், ஒவ்வொரு தொகுதிக்கும் 3 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
 
மேலும், கட்சி மற்றும் வேட்பாளர்களின் செலவை கண்காணிக்க 2 தொகுதிகளுக்கு ஒரு மத்திய செலவின பார்வையாளர் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு தொகுதிக்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் தலைமையில் தனிக்குழு செயல்படுகிறது.
 
தற்போது, பணபட்டுவாடைவை தடுக்க, ஒரு தொகுதிக்கு 20 முதல் 25 மண்டல குழுவினர் வீதம் நியமிக்கப்பட்டு உள்ளனர். 234 தொகுதிகளுக்கும் மொத்தம் 5,644 மண்டல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
எனவே, வாக்காளர்களுக்கு யார் பணம் கொத்தாலும்  அதை கையும், களவுமாக அதிகாரிகள் பிடித்துவிட்டால் அவர்கள் உடனே கைது செய்யப்படுவார்கள் என்றார்.
 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்