டெபாசிட் பெற போராடும் கர்புர்...சீமான்

வியாழன், 19 மே 2016 (10:30 IST)
கடலூர் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் டெபாசிட் பெறவே கடும் போராட்டம் நடத்த வேண்டி வரும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

 
தமிழக சட்டபேரவை தேர்தல் கடந்த 16 ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளில் வாக்குபதிவு நடைபெற்றது.
 
தமிழகம் முழுவதும் 68 வாக்கு மையங்களில், 9,621 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை முதல் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில், கடலூர் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பின்னடைவில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என வர்ணிக்கப்பட்டார். ஆனால், அவர் டெபாசிட் பெறவே கடும் போராட்டம் நடத்தி வருவதாக அங்கிருந்து வரும் தகவல் கூறுகிறது.
 
 
பரபரப்பான வாக்கு எண்ணிக்கை : முன்னிலை வகிப்பது யார்? - தேர்தல் நிலவரம் உடனுக்குடன்
 

வெப்துனியாவைப் படிக்கவும்