அதன்பின் எண்ணப்பட்ட வாக்குகளின் முடிவிலும் அதிமுகவே முன்னனியில் இருந்து வருகிறது. அதிமுக 130 தொகுதியிலும், திமுக 95 தொகுதியிலும் முன்னனியில் இருக்கிறது. எனவே ஏறக்குறைய அதிமுக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது.
இருந்தாலும், 16 தொகுதிகள் கொண்ட சென்னையில் 11 தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது. அண்ணாநகர், விருகம்பாக்கம், வேளச்சேரி, கொளத்தூர், சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், ராயபுரம், ஆயிரம் விளக்கு தொகுதிளில் திமுக முன்னனியில் இருக்கிறது.